bengaluru team 1

ஐ.பி.எல் தொடரின் 6-வது போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கே ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து, நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.பவர்ப்ளே முடிவதற்குள் 44 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஷ் ஐயரும் 13 ரன்களும் ஆட்டமிழந்தார். சுனில் நரேன், சாம் பில்லிங்ஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸல் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

அதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூ ப்ளஸிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். அனுஜ் ராவத் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். கோலி, டூ ப்ளஸிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமளித்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய டூ ப்ளஸிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று ஓவரில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி.

டேவிட் வில்லே, ஷெர்ஃபான் ரூத்தர்ஃபோர்டு இணை நிதானமாக ஆடி ஓரளவு ரன்களைச் சேர்த்தது. பெங்களூரு அணி 62 ரன்கள் இருந்த நிலையில் டேவிட் வில்லே ஆட்டமிழந்தார். ரூத்தர்ஃபோர்டு, ஷாபாஸ் அகமது ஆகியோர் அவர்களது பங்குக்கு 28, 27 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர்.

பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு: திணறிய கே.கே.ஆர் பேட்ஸ்மேன்கள்- 128 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா

இறுதி ஓவரில் 7 விக்கெட் இழந்திருந்த நிலையில் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. தினேஷ் கார்த்திக் ஸ்டிரைக்கில் இருந்தார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பெங்களூரு வெற்றியை உறுதி செய்தார். தொடர்ந்து, பவுண்டரி அடித்து பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியின் மூலம் பெங்களூரு அணி முதல்வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.