CSK v PBKS

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. முதல் வெற்றியை பதிவு செய்ய போராடும் சென்னை அணியின் வியூகம், இரு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை பார்ப்போம்.ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டத்தின் உட்சமாக கருதப்படுவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியை கண்டுரசிப்பது.

அந்த வகையில், மும்பையில் உள்ள Barbourne மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை, முதல் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து மோசமான நிலையில் உள்ளது. பந்துவீச்சில் பெரிய சொதப்பல், அணிக்கு தீபக் சஹர் திரும்பாததால் பெரும் பின்னடைவு என அடுத்தடுத்து அடி வாங்கிக்கொண்டிருக்கிறது சி.எஸ்.கே.

ஏற்கனவே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கேப்டன் ஜடேஜா மற்றும் அணியை வழிநடத்தும் தோனி ஆகிய இருவரும் இம்முறை சரியான நேரத்தில் சரியான பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்தவண்ணம் உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்பினால் மட்டுமே பவர்பிளே-யில் ஸ்கோரை உயர்த்த முடியும், டு பிளஸி இடத்தை நிரப்பவந்துள்ள கான்வே சோபிக்காதது அணிக்கு ஏமாற்றமே.

நடுவரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் உத்தப்பா, ராயுடு, தோனி, துபே ஆகியோர் ஃபார்மில் இருப்பது சற்று ஆறுதலைத் தருகிறது. ஆல்ரவுண்டர் மொயின் அலி ஜொலிக்கும் பட்சத்தில் இமாலய ஸ்கோரை எட்டலாம்.

பந்துவீச்சில் பிராவோ, ஜடேஜா, சாண்ட்னர், பிரிட்டோரியஸ் என நட்சத்திர வீரர்கள் இருந்தும் ரன்களை வாரி வழங்குகின்றனர். சுதாரித்து ஆடும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் – பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஏற்கனவே முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்த சென்னை அணி, ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை, ஒரு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. ஓபனிங் பார்ட்னர்ஷிப் மயங்க் – தவண் ஜோடி எதிரணியை மிரட்டும் வகையில் உள்ளது. ஒண்டவுன் வீரர் ராஜபக்சே ஹாட்ரிக் சிக்ஸர்களை எல்லாம் பறக்கவிட்டு அசுர ஃபார்மில் உள்ளார். தொடர்ந்து லிவிங்ஸ்டன், ஷாரூக் கான், ஓடியன் ஸ்மித் என அடுத்தடுத்து ஹிட்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் ராகுல் சஹரை தவிர மற்றவர்கள் சொதப்புகின்றனர். வேகப்புயல் ரபடா வருகை அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது. இவருடன் மற்ற வீரர்களும் இணைந்து கைகொடுக்கும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

இரு அணிகளும் இதற்கு முன்பு, 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் அணி 10 ஆட்டங்களிலும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.