20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். டார்கெட் 160-க்குள் இருந்ததால் தொடக்க வீரர்கள் இருவரும் விக்கெட் இழப்பின்றி நிதானமான பேட்டிங்கை மேற்கொண்டனர்.
சென்னை அணி வீரர்களால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க முடியவில்லை. 12 ஓவர் வரையில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி சென்றது. 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேன் வில்லியம்சன் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக், ராகுல் திரிபாதி இணை அதிரடியாக ஆடியது. அபிஷேக் சர்மா 50 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பேட்டிங்கில் தடுமாறிய சி.எஸ்.கே வீரர்கள்: ஹைதராபாத்துக்கு 155 ரன்கள் இலக்கு
மறுபுறம் அதிரடியாக ஆடிய திரிபாதி 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 17.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.