சிறப்பாக ஆடிய ராபின் உத்தப்பா 18.5 ஓவரில் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, களமிறங்கிய ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திவந்தார். இறுதி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் துபே சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. அப்போது, ஸ்டிரைக்கில் இருந்தார் துபே. முதல் பந்திலேயே துபே சிக்ஸ் அடித்து அசத்தினார். அதனை இரண்டு பந்துகளைத் தவறவிட்ட அவர் அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். 5-வது பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார் துபே. அதன்மூலம் 94 ரன்களை எட்டினார் துபே.
இறுதி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் எட்டலாம் என்ற நிலையில் ஒரு ரன்களை மட்டுமே ஷிவம் எடுத்தார். அதன்மூலம் 46 பந்துகளில் 95 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 216 ரன்களைக் குவித்தது.
அதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளஸிஸ், அனுஜ் ராவத் களமிறங்கினர். டூப்ளஸிஸ் 8 ரன்களிலும், கோலி 1 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து ராவத்தும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். நான்காவது வீரராக களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
உத்தப்பா, ஷிவம் துபே அதிரடி – 216 ரன்கள் குவித்த சென்னை அணி
7 ஓவரில் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. அதனையடுத்த ஷாபஸ் அகமது, சுயாஸ் பிரபுதேசாய் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. பிரபுதேசாய் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஷாபாஸ் அகமது 27 பந்துகளில் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆறாவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
14 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது. அதன் மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.