CSK Players 1

ஐ.பி.எல் 2022 தொடரின் 17-வது போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய போதிலும், 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உத்தப்பா வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரூதுராஜூம் 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 36 ரன்களில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனையடுத்து, மொயின் அலி, அம்பதி ராயுடு இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.

அம்பதி ராயுடு 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாஷிங்கடன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மொயின் அலியும் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா மட்டும் 23 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணியின் சார்பில் வாஷிங்கடன் சுந்தர், நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.