கைஃப் கூறியதாவது: “எவின் லூயிஸ் ஸ்பின் நன்றாக விளையாடவில்லை. இதனால்தான் மும்பை அவரை விட்டு விட்டது. உங்களிடம் மொயீன் அலியின் மூன்று ஓவர்கள் மீதமுள்ளன, ஆனால் நீங்கள் இன்னும் அவரைப் பயன்படுத்தவில்லை. லூயிஸ் சுழற்பந்து வீச்சை சரியாக விளையாடுவதில்லை. அவர் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களை சிக்ஸருக்கு அடித்து நொறுக்குவார். மொயீன் அலிக்கு பந்து கொடுக்காதது தவறு, இது ஜடேஜாவின் முடிவு அல்ல, அவர் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறார். இப்போதும், எம்எஸ் தோனி தான் முடிவுகளை எடுக்கிறார்.
இரண்டு தோல்விகள் இருந்தாலும் சிஎஸ்கேவின் டிரஸ்ஸிங் ரூம் சூழல் அமைதியாகவே இருக்கும். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும், அவர் மட்டுமே முன்னணி கதாபாத்திரத்தில் கேப்டன்சியை எடுத்தாள்கிறார். கடைசி ஆட்டத்தில் அவர் ஜடேஜாவுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார், அவர்கள் தோற்றாலும், தோனியின் அமைதியான செல்வாக்கு இருக்கும். சிஎஸ்கே பவுலிங் கண்டபடி மேம்பட வேண்டும் இல்லையெனில் கஷ்டம்தான்” என்கிறார் கைஃப்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.