இன்று கே.எல்.ராகுல் தலைமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே, இதில் ருதுராஜ், ராயுடு, உத்தப்பா, மொயின் அலி ஆகியோர் ஷைன் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜடேஜா கூட சரியாக ஆடவில்லை.
“தோனி கடந்த போட்டியில் அவரது அணிக்கு தேவையான ரன்களை அடித்தார். ஆனால் தோனி ரன் அடித்து, சென்னை அணியின் ஸ்கோர் உயர்கிறது என்றால், சென்னை அணியின் பேட்டிங்யில் எதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்’’
‘‘அவர்களது பேட்டிங் வரிசையில், டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சிவம் துபே போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் ரன்களை எடுக்க வேண்டும். கடந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா கூட சிறப்பாக விளையாடவில்லை. எனவே சிஎஸ்கே தனது அணியில் சரி செய்ய சில சிக்கல்கள் உள்ளன. இந்த போட்டியில் மொயின் அலி அந்த அணிக்கு திரும்புவது அவர்களுக்கு நல்ல விஷயமாக இருக்கும்.
நாம் எப்போதும் CSK-ஐ குறைத்து மதிப்பிடுகிறோம், பின்னர் அவர்கள் அற்புதங்களைச் செய்கிறார்கள். 2020 இன் படுதோல்விக்குப் பிறகு, 2021-ல் மீட்டெழுச்சி கண்டார்கள். ஆனால் இந்த சீசன் அவர்களுக்கு நன்றாகத் தொடங்கவில்லை. விக்கெட்டுகளை ஆரம்பத்தில் எடுக்கும் தீபக் சாஹர் இல்லை. புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் இல்லை.
நீங்கள் ருதுராஜ் கெய்க்வாட்டை கவனித்தால், அவர் கடந்த இரு சீசன்களில் தொடக்க போட்டிகளில் பெரிதாக ரன் அடிக்கவில்லை. தொடர் போக போக தான் அவரது பேட்டிங்கும் வேகம் எடுக்கிறது. கடந்த முறை இந்த தொடர் இரண்டு கட்டங்களாக நடந்தாலும், ஆரஞ்சு கேப்பை அவர் தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு கூறினார் ஆகாஷ் சோப்ரா.
இன்று மாலை 7:30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி லக்னோவை எதிர்கொள்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.