ஆர்சிபி அணியில் டுபிளெசிஸ், கோலி, கிளென் மேக்ஸ்வெல் அனைத்திற்கும் மேலாக தினேஷ் கார்த்திக் இருக்கும் பார்முக்கு இன்றும் சிஎஸ்கே வெற்றி கவுண்டமணி ஒரு படத்தில் ‘வடக்கிப்பட்டி ராமசாமி’ ஜோக்கில் கூறுவது போல் ‘ஊ ஹூ..’.தான்.
ஹெட் டு ஹெட்:
ஆனால் புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டால் இதுவரை இருஅணிகளும் 29 முறை மோதியதில் சிஎஸ்கே 19 முறை வென்றுள்ளது ஆர்சிபி 9 முறைதான் வென்றுள்ளது. சென்னையும், மும்பையும் இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை.
பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 53 ரன்களை அடித்தால் சென்னை அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா சென்னைக்கு எதிரான விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளார். சென்னை அணியுடன் இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 948 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இன்றைய போட்டியில் 52 ரன்கள் அடித்தால் ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சிஎஸ்கே உத்தேச லெவன்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கே), சிவம் துபே, எம்.எஸ். தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச லெவன்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் , வனிந்து ஹசரங்க, சாமா மிலிந்த், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.