நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுசொத்தையாக ஆடி வருகிறது, அந்த அணிக்கு ஒரு கேரக்டரே இல்லாமல் ஆடுகிறது, பவுலிங், பேட்டிங் என்று எல்லாமே சொதப்பலாகி வருகிறது, இதற்குக் காரணம் 2-3 சீசன்களாகவே ஒரே அணியை வைத்துக் கொண்டு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காததுதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
