14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் அஜிங்கே ரஹானே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 8 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா இணை ஓரளவு ரன்களைக் குவித்தது. 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரானா லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அன்ட்ரூ ரஸல் 24 எடுத்து தாகுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.