முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
அதன்பின் தினேஷ் கார்த்திக் – ஷபாஸ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். பெங்களூரு அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்னும் ஷபாஸ் அகமது 26 பந்தில் 45 ரன்னும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது. ஏ.பி.டிவிலியர்சுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து இன்னொரு 360 டிகிரி வீரராக தினேஷ் கார்த்திக் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார்.
நேற்றைய போட்டி முடிந்த பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் தினேஷ் கார்த்திக் பற்றி கூறுகையில் , ” அவர் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.
ஒரு கட்டத்தில் வெற்றிக்கு மிக தூரத்தில் இருந்து பின்னர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல களத்தில் சிறந்த குணத்தை வெளிப்படுத்தும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் தேவை. அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் ” என தெரிவித்தார்.
ஆட்டத்தை ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்ல சில நல்ல வலுவான மனநிலையுடைய வீரர் வேண்டும். இறுதிவரை அவரது அமைதி, உண்மையில் நம்பமுடியாதது. இது எங்களுக்கு ஒரு பெரிய சொத்தாக உள்ளது, ஏனெனில் முடிவில் அந்த அமைதி எதிர்முனை வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வழிவகை செய்கிறது” என்றார் டுபிளெசிஸ்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.