ஆனால் அதன் பிறகு தீபக் ஹூடா 41 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுக்க, ஆயுஷ் பதோனி 41 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசி இருவரும் 11 ஓவர்களில் 87 ரன்களைச் சேர்த்தனர். ஹர்திக் பாண்டியா, வருண் ஆரோன் ரன்களைக் கசியவிட, லாக்கி பெர்கூசன், ரஷீத் கான் டைட் செய்தாலும் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து குருணால் பாண்டியா கடைசியில் இறங்கி 13 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். லக்னோ 158/6.
தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்சில் ஷுப்மன் கில் அகராதித் தனமாக ஆடி அவுட் டக் அவுட் ஆனார், விஜய் சங்கர் கால் பத்திரம் என்று விழுந்த யார்க்கரில் குச்சி எகிறியது. துஷமந்த சமீரா அருமையாக வீசினார். மேத்யூ வேட் (30), ஹர்திக் பாண்டியா (33) ஸ்கோரை 72 வரை கொண்டு சென்றனர். அப்போது ஹர்திக் பாண்டியா, தன் சகோதரர் குருணால் பாண்டியா பந்தை தூக்கி அடிக்கிறேன் பேர்வழி என்று மணீஷ் பாண்டேயிடம் கேட்ச் ஆனார். ஆனால் ராகுல் திவேத்தியா, டேவிட் மில்லர் (30), அபினவ் மனோகர் (15) குஜராத் டைட்டன்ஸை கரை சேர்த்தனர்.
இந்நிலையில் குருணால் பாண்டியாவிடம் அவுட் ஆனது அணி தோற்றிந்தால் தன்னை உண்மையில் வேதனைபடச் செய்திருக்கும் என்று ஹர்திக் கூறினார்:
“வெற்றியின் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம். ஷமி தனது சீம் பொசிஷன்களுக்குப் பெயர் பெற்றவர், அவர் எங்களுக்கு ஒரு சிறந்த தொடக்கத்தைத் தந்தார். இந்த விக்கெட்டில் எந்த நாளும் 160 ரன்கள் எடுத்திருப்போம். பெரும்பாலும் நான் நான்காவது இடத்தில் பேட் செய்வேன், ஏனென்றால் மற்றவர்கள் சுதந்திரமாக விளையாடும் வகையில் எனது அனுபவத்தின் மூலம் அழுத்தத்தை விடுவிக்க விரும்புகிறேன். நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெற விரும்புகிறோம், எந்த வகையிலும் பங்களிப்பை யாராலும் பறிக்க முடியாது. சூழ்நிலை மிகவும் ஈரப்பதமாக இருந்தது, அதனால் ஷமியின் ஸ்பெல்லை நான் அங்கு முடித்திருக்க மாட்டேன்.
அபினவ் மனோகர் ஒரு திறமைசாலி. அவர் எதிர்காலத்தில் பேசப்படும் ஒரு வீரர் ஆவார். திவேத்தியாவும் பரபரப்பாக ஆடக்கூடியவர். நாங்கள் தோற்றிருந்தால் க்ருனால் பாண்டியாவிடம் அவுட் ஆனது என் மனதை கொத்தியிருக்கும், ஆனால் இப்போது குடும்பம் நடுநிலையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர் என்னை வெளியேற்றினார், நாங்கள் போட்டியில் வென்றோம், ”என்று கூறினார் ஹர்திக் பாண்டியா.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.