கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தேன். பெங்களூருவில் நடந்த போட்டிகுப் பிறகு அங்கிருந்து புறப்படத் தயாரானோம். அப்போது சக வீரர் ஒருவர், அவர் பெயரை வெளியிட மாட்டேன், அவர் என்னை அழைத்தார், அவர் செம்ம டைட், நன்றாக குடித்திருந்தார். நானும் அப்பாவியாகச் செல்ல அப்படியே என்னை அலேக்காக தூக்கி பால்கனியில் தொங்க விட்டார்.
அவரது கழுத்தை நான் நன்றாகக் கட்டிக் கொண்டிருந்தேன். ஒருவேளை நான் என் பிடியை நழுவ விட்டிருந்தால் அவ்வளவுதான் 15வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். 15வது மாடி பால்கனியில் அவரது கைகளில் நான் தொங்கிக் கொண்டிருந்தேன். பிறகு அங்கிருந்தவர்கள் என்னை மீட்ட போது நான் மயக்கமடைந்து விட்டேன். இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பியது நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. சிறு தவறு செய்திருந்தாலும் அவ்வளவுதான் அதலபாதாளம்தான்.
அதே போல் 2011-ல் மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றிருந்தது, நாங்கள் சென்னையில் இருந்தோம். மிகப்பெரிய குடிகாரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அன்று அதிகம் ‘ஜூஸ்’ குடித்திருந்தார். அவரும் ஜேம்ஸ் பிராங்கிளின் என்ற வீரரும் என்ன போதையில் இருந்தனர் என்று தெரியவில்லை. என் கை கால்களை கட்டி விட்டு வாயில் டேப் ஒட்டி விட்டு பார்ட்டிக்குச் சென்றனர், என்னை மறந்து விட்டனர். இரவுமுழுதும் வாயில் டேப்புடன் அப்படியே கிடந்தேன். மறுநாள் அறையை சுத்தம் செய்ய வந்த நபர் என்னைப்பார்த்து அதிர்ந்தார். உடனடியாக என்னை மீட்டார்.
ஆனால் இதற்காக சைமண்ட்ஸ், பிராங்க்ளின் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக ஜூஸ் அதிகம் குடித்தால் இதெல்லாம் சகஜம் என்றனர், என்று தன் திக் திக் அனுபவங்களை ருசிகரமாகப் பகிர்ந்து கொண்டார் செஹல்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.