ayush badoni1

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் ஆயுஷ் பதோனி, 41 பந்தில் 54 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் அறிமுகத்தில் அரைசதம் அடித்த மூன்றாவது இளம் வயதில் வீரர் என்ற சாதனை படைத்தார்.ஐபிஎல் பெரும்பாலும் “திறமை இருந்தால் வாய்ப்புகள் நிச்சயம்” என்ற ஒரு வாசகத்தை நிரூபிக்கும் தொடராக உள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக, T20 லீக் இந்த வாசகத்தை தொடர்ந்து நிரூபித்துள்ளது.இன்றைய இந்திய சூப்பர் ஸ்டார்களில் பலர் முன்பு இந்தியன் பிரீமியர் லீக்கில் முதன்முதலில் தங்கள் பெயர்களை உருவாக்கிக் கொண்டவர்களே திங்கட்கிழமை இரவு ஆயுஷ் பதோனி தனது திறமையை வெளிப்படுத்திய பிறகு வருங்கால நட்சத்திரப் பட்டியலில் இணைந்துள்ளார்.

பதோனி, ஜாம்பவான் ராகுல் திராவிட்டால் கவனிக்கப்பட வேண்டிய மூன்று பேட்டர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அந்த இளைஞரைக் கவனித்துக் கொள்ளுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசனை திராவிட் கேட்டுக் கொண்டார். அதுல் வாசனும் அவரது பங்கிற்கு டெல்லியின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தன் செல்வாக்கைப் பயன்படுத்தி டிடிசிஏவின் தேர்வுக் கூட்டத்தின் போது பதோனி பெயரைப் பரிந்துரைத்தார், ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.

படோனி இறுதியாக கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் டெல்லி அணிக்காக அறிமுகமானார். இருப்பினும், ஒரு இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது, அதில் அவர் எட்டு ரன்கள் எடுத்தார்.

டெல்லி கிரிக்கெட் வீரரின் தந்தை வடக்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வசிக்கும் ஆவணப்பட தயாரிப்பாளர் ஆவார். பதோனியின் தந்தை அவருடன் சிமெண்ட் ஆடுகளத்தில் மணிக்கணக்கில் பயிற்சி செய்வார். இறுதியில், மறைந்த பயிற்சியாளர் தாரக் சின்ஹாவின் வழிகாட்டுதலுடன் டெல்லியின் புகழ்பெற்ற சானட் கிளப்பிற்காக விளையாடத் தொடங்கினார்.

திங்களன்று, LSG கேப்டன் KL ராகுல், க்ருனால் பாண்டியாவை நிறுத்தி வைத்து பதோனியை முன்னால் பேட் செய்ய அனுப்பினார். நேரத்தை எடுத்துக் கொண்ட பதோனி 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடினார். பின்னர் ரஷித் கானை ஒரு சிக்ஸர் விளாசினார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், அவர் LSG ஆல் அவரது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் எடுக்கப்பட்டார், மேலும் அவரை ஆதரித்ததற்காக கௌதம் கம்பீருக்கு நன்றி தெரிவிக்க பதோனி மறக்கவில்லை.

திங்களன்று பதோனி கூறும்போது, “டெல்லி அணிக்காக எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கௌதம் கம்பீர்தான், எனக்கு நிறைய ஆதரவளித்தார். என்னுடைய இயற்கையான விளையாட்டை விளையாடச் சொன்னார். என்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அவரது அறிவுரை எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியது” என்று பதோனி திங்களன்று கூறினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.