கிட்டத்தட்ட வெற்றி பெற முடியாத நிலையிலிருந்து வென்றது டெல்லி கேப்பிடல்ஸ் அன்று. அதுவும் அதிரடி மன்னன் ரிஷப் பண்ட்டும் சோபிக்காமல் ஆட்டமிழந்தார், பசில் தம்பி 3 விக்கெட்டுகளை மும்பை இந்தியன்ஸுக்காகக் கைப்பற்ற ஜஸ்பிரித் பும்ராவுக்கு அன்று சாத்துமுறை நடந்தது.
இந்த வெற்றிக்குப் பிறகு டெல்லியின் லலித் யாதவ் பேட்டியளித்த போது கூறியதாவது:
அணிக்கு தேவைக்கேற்ற பாணியில் தான் ஆடினேன், இலக்கு எடுக்கக் கூடிய இலக்குதான், விக்கெட்டுகள் தேவை அதனால் ஒருமுனையை நிதானித்தேன். கடைசி ஓவர் வரைக்கும் ஆட்டம் சென்றால் வெற்றி நிச்சயம் என்று கருதினேன். ஆனால் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டோம். அக்சர் படேலுடன் விளையாடுவது மிகவும் சவுகரியமாக இருக்கும்.
நாங்கள் இருவரும் மும்பை வீழ்த்துவதை விட சிரித்து பேசி ஆடினோம் என்பதே வெற்றிக்கு அடித்தளம். மேலும் விக்கெட்டை கொடுக்காமல் ஆடுவது என்று இருவரும் தீர்மானித்தோம். கேப்டன் ரிஷப் பண்ட்டும் என்ன தோன்றுகிறதோ அப்படி ஆடு, கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு செல் என்றார். அதை மனதில் வைத்துத்தான் எச்சரிக்கையுடனும் தேவைப்படும் போது ஆக்ரோஷமும் காட்டி ஆடினோம்.
நானும் அக்சர் படேலும் சிரித்துப் பேசிக்கொண்டுதான் இருந்தோம். தெரிந்த வீரருடன் ஆடும்போது இந்த மனநிலைதான் இருக்கும், என்றார் லலித் யாதவ்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.