அப்போது ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் களமிறங்கிய கைரன் பொல்லார்டு 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மறுபுறம் 38 ரன்களுடன் திலக் வர்மா களத்தில் இருந்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைக் குவித்துள்ளது. கொல்கத்தா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.