Punjab player

ஐ.பி.எல் 2022 சீசனின் மூன்றாவது போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் அதிரடியாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர்.டூ ப்ளஸிஸ் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து தவனும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராஜபக்ச 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜ் பவாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஆட்டம் முழுவதுமாக பெங்களூரு அணியின் கட்டுக்குள் வந்தது. லியம் லிவிங்ஸ்டோனும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒடியன் ஸ்மித் ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்தார். பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார்.

அக்ஷர் படேல், லலித் யாதவ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி

அவர் 8 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுட்டன் 25 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம், ஷாருக்கானும் 24 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 208 ரன்கள் எடுத்து முதல்வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.