ஐ.பி.எல் 2022 தொடரின் 5-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.சஞ்சு தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். மறுபுறம் நிதானமாக ஆடிய பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் அவருடைய பங்குக்கு அதிரடியாக 3 சிக்ஸ்ர்கள், 2 பவுண்டரிகளுடன் 13 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.