Jos butler hetmyer

ஐ.பி.எல் 2022 தொடரின் 13-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யாஷஸ்வி ஜெயஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்.பட்லர், படிக்கல் இணை நிதானமாக ஆடியது. அணியின் ஸ்கோர் 76 ஆக இருந்த நிலையில் படிக்கல் ஆட்டமிழந்தார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 8 ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் பட்லர் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. வழக்கமாக அதிரடியாக ஆடும் பட்லர் இந்தமுறை நிதானமாகவே ஆடினர்.

ஹெட்மயரும் நிதானமாக ஆடினர். 40 பந்துகளில் 43 ரன்கள் என்றிருந்தநிலையில், பட்லர் 19-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும், 20-வது ஓவரில் சிக்ஸர்களும் அடித்துஅசத்தினார். ஹெட்மயரும் அவரது பங்குக்கு இறுதி பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார். அதன்மூலம் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 169 ரன்கள் குவித்தது.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.