விராட் கோலி தனக்கு பிடித்த விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என தெரிவித்தார். பின்னர் அவரிடம் ஒரு நாள் காலையில் நீங்கள் ரொனால்டோவாக மாறினால் முதலில் என்ன செய்வீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் , “கிறிஸ்டியானோ ரொனால்டோவாக மாறினால் எனது மூளையை பரிசோதனை செய்து பார்ப்பேன்.
ஏனென்றால், அவருக்கு இருக்கக்கூடிய அந்த மன வலிமை எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய்ச்சி செய்வேன்” என தெரிவித்தார்.
கோலி இந்த நிகழ்வில் மேலும் தனது இதயம் உடைந்த மற்றும் RCB-இல் தனது வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணங்களைப் பற்றியும் கூறினார். “ஐபிஎல் இறுதி 2016 மற்றும் அதே ஆண்டு, 2016 டி 20 உலகக் கோப்பை அரையிறுதி வான்கடேவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக” என்று கோஹ்லி இதயத்தை உடைக்கும் தருணங்களை நினைவு கூர்ந்தார்.
கோலி 2016 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 81.08 சராசரியுடன் 973 ரன்களை அடித்த போது அவரது வாழ்க்கையின் உச்சக்கட்ட பார்மில் இருந்தார் – ஒரு சீசனில் இதுவரை இல்லாத அதிக ரன்கள், இதை யாரும் இனி உடைக்க முடியாது. ஆனால் இந்த பார்மில் இருந்தும் அணியை கோப்பையை வெல்வதற்கு இட்டுச் செல்ல முடியவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.