முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும், அதற்கு அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி கம்பீரமாக வீறுநடை போடுகிறது.
மும்பை அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தியதுடன் அணி 193 ரன்களை எட்டவும் வழிவகுத்தார். அந்த ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் அனைவரும் அபாரமாக செயல்பட்டு மும்பை அணியை 170 ரன்னுக்குள் முடக்கினார்கள்.
ராஜஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க அதிக ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் பெங்களூரு அணியும் தங்களது உத்வேகத்தை தொடர எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆர்சிபி அணிக்கு தொடர் பின்னடைவு என்னவெனில் அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இன்று ஆடமுடியாததே, 6ம் தேதிக்கும் மேல்தான் ஆஸ்திரேலிய வீரர்கள் வர முடியும். ஆர்சிபி அணி தினேஷ் கார்த்திக்கை இன்னும் நல்ல முறையில் பயன்படுத்தினால் அவர் இன்னொரு டிவில்லியர்ஸ்தான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு அட்டகாசம், ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி, ஆகியோர் நன்றாக வீசுகின்றனர். அஸ்வின், செஹல் போன்ற அனுபவசாலிகளும் எந்தப் போட்டியையும் வெல்லக் கூடியவர்கள்
நேருக்கு நேர் ஸ்டாட்ஸ்:
இரு அணிகளும் 24 முறை விளையாடியதில் 12 ஆர்சிபி வெற்றி, 10 ராஜஸ்தான் வெற்றி. ஐபிஎல் 2021-ல் கூட 2 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆர்சிபியிடம் தோல்வி அடைந்துள்ளது.
ராஜஸ்தான் உத்தேச லெவன் வருமாறு: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மையர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், நவ்தீப் சைனி, ட்ரெண்ட் போல்ட், செஹல், பிரசித் கிருஷ்ணா.
ஆர்சிபி அணி: ஃபாப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஷெர்பானி ருதர்போர்ட், ஹாபாஸ் அகமெட், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லே, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.