1649214331 pic

மத்தியப்பிரதேச அணிக்காக விளையாடிய தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர், கடந்த சீசனில் திடீர் அதிரடி அவதாரம் எடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கூட்டி சென்றார்.அதுவும் இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது மட்டுமே அணியில் இணைந்த அவர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பட்டையைக் கிளப்பியது தேர்வுக்குழுவினரை கவர்ந்து ஈர்த்தது. வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயத்தால் அவதிப்பட்டதால், உடனே இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டார். பெரிய அளவில் இல்லையென்றாலும், ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்நிலையில் தற்போது, 6 மாத இடைவேளைக்குப் பிறகு கிரிக்கெட் உலகிற்கு திரும்பியுள்ள ஹார்திக் பாண்டியா குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதனால், வெங்கடேஷ் ஐயர் வந்த வேகத்தில் இந்திய அணியிலிருந்து ஓரம் கட்டப்படுவது உறுதியாகிவிட்டது. மேலும் கடந்த மூன்று இன்னிங்ஸ்களிலும் 16,10,3 போன்ற சொற்ப ரன்களை மட்டும் சேர்த்து பார்ம் அவுட்டில் இருக்கிறார். இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படி செயல்பட்டால் மட்டுமே, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும்.

இந்நிலையில், வெங்கடேஷ் ஐயர் ஒரு பிரபல நடிகைக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரூட் விட்டு, நெட்டிசன்களிடம் வசமாக சிக்கியுள்ளார். அந்த நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் டேக்ஸிவாலா படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா ஜவால்கர்தான். இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிரும் பழக்கம் கொண்டர்.

இதனை சைலண்டாக நோட்டமிட்ட வெங்கடேஷ் ஐயர், திடீரென்று ஒரு புகைப்படத்திற்கு ‘க்யூட்’ என கமெண்ட் செய்திருக்கிறார். இதற்கு உடனே ரிப்ளே செய்த பிரியங்கா ‘யார்? நீங்களா?’ என பதிவிட்டதை ரசிகர்கள் பார்த்து, அதனை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், இருவருக்கும் இடையில் சம்தீங் சம்தீங் இருக்குமோ, ஒருவேளை இப்படி இருக்குமோ என ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.