ஹைலைட்ஸ்:

  • சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கும் ரசிகர்கள்
  • ட்விட்டரில் டிரெண்டாகும் #பணம்பறிக்கும்_பாமக

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்திற்கு வரவேற்பும், அதே சமயம் சில இடங்களில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக சூர்யா, ஜோதிகா, அமேசான் நிறுவனத்திடம் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இதை எல்லாம் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் #பணம்பறிக்கும்_பாமக என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
பாமகவினரை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸுகளும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சூர்யாவை இப்படி சிலர் மிரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அமைதியாக இருப்பது ஏன் என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தால், தயவு செய்து அதை ஹூட்டில் பேசி போஸ்ட் செய்யாதீர்கள் என்று ரஜினியிடம் சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர்.

என் பாட்டி மாதிரியே இருக்கீங்க: ராசாக்கண்ணு மனைவியை சந்தித்து நிதியுதவி அளித்த ராகவா லாரன்ஸ்

இதற்கிடையே ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் வங்கியில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக சூர்யா அறிவித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸோ, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார். பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து பேசி நிதியுதவியும் செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.