இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்கி ரிலீஸ் செய்வார்கள் என்று கமல் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

இந்தியன் 2

-2

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் துவங்கும் முன்பு ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வந்த படம் இந்தியன் 2. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். அத்துடன் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவைர துவங்கப்படவில்லை. இது தொடர்பாக லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றும் தீர்வு கிடைக்கவில்லை.

கமல்

இந்தியன் 2 படம் கைவிடப்பட்டுவிட்டது என்று பேச்சு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ராம் சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர். அதன் பிறகு அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். அதனால் இந்தியன் 2 படத்தின் நிலையை நினைத்து கமல் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். ஷங்கரை போன்றே கமலும் தன் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார்.

நம்பிக்கை

ஷங்கர் என்ன தான் ராம் சரண் பட வேலையில் பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் அவர் இன்னும் இந்தியன் 2 புகைப்படத்தை தான் வைத்திருக்கிறார். அதை பார்க்கும் போது இந்தியன் 2 படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்கி நிச்சயம் ரிலீஸ் செய்வார் என்கிற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள்

ஷங்கருக்கும், கமலுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஷங்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டார் கமல். அதை பார்த்த சிலரோ, இவ்வளவு லேட்டா வாழ்த்துறீங்க ஆண்டவரே என்றார்கள். அதற்கு கமல் ரசிகர்களோ, ஆண்டவராவது வாழ்த்தினார், ஷங்கர் இயக்கத்தில் நடித்த சிலர் கண்டுகொள்ளவே இல்லை என்றார்கள்.