உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘விக்ரம்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கசிந்த செய்தியை இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸாகும் இந்த படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், காயத்ரி ஷங்கர், மைனா நந்தினி, அந்தோனி வர்கீஸ் உள்பட பலர் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Crimson Large Motion pictures is thrilled to go along with #Ulaganayagan @ikamalhaasan for the Tamil Nadu Theatrical distribution of #Vikram #VikramFromJune3#Aarambikalangala @Udhaystalin @RedGiantMovies_ @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @anirudhofficial @RKFI pic.twitter.com/qGeIUV8Onw
— Crimson Large Motion pictures (@RedGiantMovies_) March 30, 2022