kasathuri242022mt 718

kasathuri242022m4

நடிகை கஸ்தூரி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு #mrPREGNANT என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்ப்பிணி வேடத்தில் அவர் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி சீரியலில் நடிக்கலாம் என்றும் ஏப்ரல் ஒன்று என்பதால் முட்டாள்கள் தின பதிவாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பதையும் பார்த்தோம்.

kasathuri242022m

இந்த நிலையில் ரசிகர்கள் ஊகித்தது சரிதான் என்று கஸ்தூரியின் அடுத்த பதிவில் இருந்து தெரியவந்துள்ளது. நடிகை கஸ்தூரி சற்று முன் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பதிவில் ’மிஸ்டர் பிரக்னண்ட்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், அந்த படத்தின் கெட்டப் தான் நேற்று பதிவு செய்த புகைப்படம் என்றும் மற்றும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தின புகைப்படமாகவும் அதை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

kasathuri242022m1

’மிஸ்டர் பிரக்னண்ட்’ என்ற திரைப்படத்தில் சையத் ஷோகேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலு சுகாசினி மணிரத்னம், கஸ்தூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

kasathuri242022m2

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.