குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி இல்லை பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குஷ்பு

குஷ்பு என்கிற பெயரை கேட்டதும் அவர் கொழுக் மொழுக் என்று இருப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்நிலையில் தான், நானும் எடையை குறைக்கப் போகிறேன் என்று வெயிட் லாஸ் கோதாவில் இறங்கிவிட்டார். அதன் விளைவாக பூசினாற் போன்று இருந்த குஷ்பு ஒல்லியாகிவிட்டார். அநியாயத்திற்கு எடையை குறைத்துவிட்டார்.

புகைப்படங்கள்

எடையை குறைத்திருக்கும் குஷ்பு பட்டுப் புடவையில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்களுக்கு பகீர் என்று ஆகிவிட்டது. அதற்கு காரணம் குஷ்புவின் தோற்றம் தான். ஒல்லியான கையோடு உங்கள் முகம் ஒரு மாதிரி ஆகிவிட்டது அக்கா, ஏன் இந்த எடை குறைப்பு என்று ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Twitter-KhushbuSundar

அழகு

உங்களுக்கு அழகே பூசினாற் போன்று இருப்பது தான். அப்படி இருக்கும்போது எடையை குறைத்துவிட்டீர்களே. ஒல்லியான பிறகு உங்கள் முகத்தில் ஒரு தொய்வு தெரிகிறது. இரண்டு வளர்ந்த மகள்களுக்கு அம்மாவாக இல்லை அக்கா போன்று இத்தனை நாட்கள் தெரிந்தீர்கள். ஆனால் தற்போது முகத்தில் வயது தெரிகிறது என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரகசியம்

குஷ்புவை மீண்டும் வெயிட் போடச் சொன்னாலும் அவர் தன் எடையை குறைத்த ரகசியத்தை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள். நல்லா சப்பியாக இருந்த ஹன்சிகா தன் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார். இந்நிலையில் நீங்களும் ஒல்லியாகிவிட்டீர்கள். ஹன்சிகாவை பார்த்து வந்த ஆசையா?. இதற்குத் தான் அவருடன் சேரக்கூடாது என்றது என்கிறார்கள் ரசிகர்கள். எடையை குறைத்ததால் குஷ்பு சந்தோஷத்தில் இருக்க அவரின் ரசிகர்களோ சோக கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.