இதுவரை இங்கு டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை. 7 தொடர்கள் ஆடியிருக்கிறோம் 6 தொடர்கள் தோல்வி, ஒரு தொடர் டிரா. கடைசியாக 2018-ல் 2-1 என்று இந்தியா கோலி தலைமையில் உதை வாங்கினாலும் இந்திய அணியில் சூப்பர்ஸ்டார்கள் உருவாகினர். இந்த முறை தென் ஆப்பிரிக்கா அணியும் பெரிய அணியல்ல. எனவே ஆஸ்திரேலியாவுக்கு அவர்கள் மண்ணில் செய்ததை நாம் இங்கும் செய்ய முடியும்.
இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க தொடர் 2018 ஒரு பிளாஷ்பேக்:
இது கோலியின் தென் ஆப்பிரிக்கா தொடரின் முதல் கேப்டன்சி அசைன்மெண்ட். ரவிசாஸ்திரியும் இருந்தார். முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடும் வறட்சிகளுக்கு இடையே நடந்தது, குளோபல் வார்மிங்குக்குப் பிந்தைய நகரம் என்று கூற முடியும் அதை, ஏனெனில் சுத்தமாக 6 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறண்ட பூமியாகி இருந்தது கேப்டவுன். இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
புவனேஷ்வர் குமார் பவுலிங்.
2வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது, கோலி அற்புதமான சதம் எடுத்தார், ஆனாலும் இது இந்தியா மாதிரியே பிட்ச் என்று தெனாப்பிரிக்காவினர் கூறி கோலியின் சதத்துக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்து விட்டனர். இந்த டெஸ்ட்டிலும் இந்தியா 135 ரன்களில் தோல்வி கண்டது. ஆனால் ஜொஹான்னஸ்பர்க் 3வது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி போட்ட ஒரு ஸ்பெல்லினால் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் முடித்தனர்.
விராட் கோலி
ஜஸ்பிரித் பும்ரா: இந்தியாவின் இன்றைய பவுலிங் சூப்பர் ஸ்டார் அங்குதான் எழுச்சி பெற்றார், ஏ.பி.டிவில்லியர்ஸ் இடுப்பு, அள்ளை வழியாகவெல்லாம் பும்ராவின் பந்து புகுந்து விளையாடியதைப் பார்க்க முடிந்தது. 3 டெஸ்ட்களில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வெர்னன் பிலாண்டர், ரபாடா, ஷமி ஆகியோர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பிலாண்டர்
புவனேஷ்வர் குமார் முதல் டெஸ்ட் தொடங்கியவுடனேயே அருமையாக வீசி 12 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்காவின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார், 12/3லிருந்து இந்தியா நழுவ விட்டது, காரணம் டிவில்லியர்ஸ் அதிரடியாக 65 ரன்களை எடுக்க டுபிளெசிஸ் 62, டி காக் 43, கேஷவ் மகராஜ் 35 எடுக்க, பிலாண்டர் 23, ரபாடா 26 என்று ஸ்கோர் 286 ரன்களுக்குச் சென்றது. புவனேஷ்வர் குமார் 4, அஸ்வின் 2 விக்கெட். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 95 ரன்களை விளாசியதாலும் மீண்டும் பேட்டிங்கில் புவனேஷ்வர் குமார் 25 ரன்களை எடுத்ததாலும் 209 ரன்களை எடுத்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்சில் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் உள்ளே புக 130 ரன்களுக்குச் சுருண்டது தென் ஆப்பிரிக்கா.
ஆனால் வெற்றி பெற இலக்கு வெறும் 208 ரன்கள்தான், இதைக்கூட எடுக்க முடியாமல் 135 ரன்களுக்கு சுருண்டோம், பிலாண்டர் 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
2வது டெஸ்ட்: இது செஞ்சூரியனில் நடந்தது, 7 விக்கெட்டுகளையும் 38 ரன்களையும் எடுத்த புவனேஷ்வர் குமாரை அதிர்ச்சிகரமாக நீக்கினார் அராஜக கோலி. இஷாந்த் சர்மாவை சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சி 335 ரன்கள் குவித்தது. அஸ்வின் 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3 விக்கெட். பும்ரா விக்கெட் இல்லை. தொடர்ந்து ஆடிய இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் 153 ரன்களினால் 307 ரன்கள் எடுத்தது. அஸ்வின் முதல் டெஸ்ட் 37 ரன்களுக்குப் பிறகு இந்த டெஸ்ட்டிலும் 38 ரன்கள் எடுத்தார்.. 2வது இன்னிங்ஸில் டீன் எல்கர் 61, டிவில்லியர்ஸ் அதிரடி 80 விளாச தென் ஆப்பிரிக்கா 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 287 ரன்கள்தான். ஆனால் லுங்கி இங்கிடி 6 விக்கெட்டுகளைச் சாய்க்க இந்தியா 151 ரன்களுக்கு மடிந்தது தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.
3வது டெஸ்ட் போட்டிக்கு பாவம் அஸ்வினை உட்கார வைத்தார், ஆனால் அதுதான் அஸ்வினின் துரதிர்ஷ்டம், அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது, புவனேஷ்வர் குமார் மீண்டும் வந்தார், புஜாரா, விராட் கோலி அரைசதம் எடுக்க இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்களையே எடுத்தது. ஆனால் பும்ரா 5, புவனேஷ்வர் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க தென் ஆப்பிரிக்கா அணியும் 194 ரன்களுக்கு சுருண்டது. 2வது இன்னிங்சில் 247 ரன்களை அடித்தது. கோலி 46, புவனேஷ்வர் குமார் 33, ஷமி 27 ரன்களை எடுத்தனர், ரகானே 48. இந்தியா 247 ரன்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி 241 ரன்கள் எடுத்தால் வெற்றி, இத்தனைக்கும் அந்த அணி டீன் எல்கர் (86), கேப்டன் ஆம்லா 52 மூலம் 124/1 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு ஷமி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்த பும்ரா, இஷாந்த் தலா 2 விக்கெட்டையும் புவனேஷ்வர் 1 விகெட்டையும் வீழ்த்த 124/1 லிருந்து 177க்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா. டீன் எல்கர் தொடக்க வீரராக இறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு இடையில் சுவராக நின்றார், ஆனால் ஷமி இன்னொரு முனையை தகர்த்தார். இந்த 2018 தொடர் மறக்க முடியாத ஒரு தொடராக அமைந்தது.
தொடர் நாயகனாக வெர்னன் பிலாண்டர் தேர்வாக, புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Observe @ Google Information: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Additionally Observe @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube