மயங்க் அகர்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த ராஜபக்சே சில நிமிடங்கள் மட்டுமே களத்தில் இருந்தாலும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 9 பந்துகளில் 31 ரன்கள்( 3 சிக்ஸ்டர், 3 ஃபோர்) எடுத்த ராஜபக்சே சௌதி பந்தில் கேட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினர்.
இறுதியில் பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார். சௌதி 2 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் 138 ரன்கள் எடுத்தால் என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
இதையும் படிங்க: சிஎஸ்கேவை வீழ்த்தியதை கோப்பையையே வென்றது போல் வெறித்தனம் காட்டிய கம்பீர்
அஜிங்க்யா ரஹானே 12 ரன்களிலும் வெங்கடேஷ் அய்யர் 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை அந்த அணி இழந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது அதிரடியான ஆட்டம் மூலம் வாண வேடிக்கை காட்டினார்.இதனால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 14வது ஓவரின் 3வது பந்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட ரஸ்ஸல் 8 சிக்சர், 2 ஃபார் உட்பட 70 ரன்களை குவித்தார். மேலும், இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியையும் தனதாக்கினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.