இந்தியாவில் மற்றும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா எங்கிலும் உள்ள பல நாடுகளில் எல் ஓ எல்: ஹஸ்ஸே தோ ஃபஸ்ஸே-வின் அறிமுகத்தை தொடர்ந்து , அமேசான் ப்ரைம் , அமேசான் ஒரிஜினல் தொடரான எல் ஓ எல்-ன் தமிழ் பதிப்பை இன்று அறிவித்ததுள்ளது. எல் ஓ எல் (சத்தமாக சிரி) : எங்க சிரி பாப்போம் என தலைப்பிடப்பட்ட, எழுதப்படாத நகைச்சுவை ரியாலிட்டி தொடர் இந்த மாதம் உலகெங்கிலும் தனித்தன்மையாக ப்ரைம் வீடியோவில் அறிமுகப்படுத்தப்படும். பத்மஸ்ரீ விருது பெற்றவரும் , புகழ்பெற்ற நகைச்சுவை நடிகருமான மறைந்த விவேக் அவர்கள் மற்றும் பெயர்பெற்ற நடிகர் மிர்ச்சி சிவா இந்த தொடரின் தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்களாக காணப்படுவார்கள். எல் ஓ எல் -எங்க சிரிங்க பார்ப்போமில் மாயா எஸ் க்ரிஷ்ணன், அபிஷேக் குமார், ப்ரேம்ஜி அமரன், ஹாரதி கணேஷ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், பேகி (பார்கவ் ராமக்ரிஷ்ணன்), மற்றும் ஸ்யாமா ஹரினி உட்பட பத்து நகைச்சுவை நடிகர்கள், இரண்டு தொகுப்பாளர்களின் விழிப்பான பார்வையின் கீழ் ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் எதிராக களம் இறங்குவார்கள். பல வகையைச் சேர்ர்ந்த தமிழ் நகைச்சுவை பொழுதுபோக்காளர்களை இணைக்கும், எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம்-ன் முதல் காட்சி அமேசான் ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் 27 அன்று வெளியிடப்பட உள்ளது.

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமேசான் ப்ரைம் வீடியோ, இண்டியா, இண்டியா ஒரிஜினல்ஸ் தலைவர், அபர்ணா புரோஹித் கூறும் போது, இது எங்களுக்கு உணர்வுபூர்வமான ஒரு கணம். நாங்கள் அவருடைய இழப்பிலிருந்து இன்னும் மீண்டும் வராத போதும், விவேக் சாருடன் வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிக்க அதிர்ஷ்டசாலிகள் என உணர்கிறோம். எல் ஓ எல்: எங்க சிரி பாப்போம் அவருக்கு மற்றும் அவருடைய இரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக காணிக்கை ஆகும். விவேக் சார் தொடர்ந்து நம்முடைய இதயங்கள் மற்றும் நினைவுகளில் வாழ்வார்.”

மேலும், “இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவமான: ஹசே தோ ஃபசே-வை எங்களுடைய பார்வையாளர்கள் ரசித்தனர். இன்று ஆழ்ந்த தன்னடக்கத்துடன் , நாங்கள் இந்த சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறோம். தனித்தன்மையாக தமிழில் உருவாக்கப்பட்ட, எல் ஒ எல்: எங்க சிரி பாப்போம், எங்கள் போட்டியாளர்களாக தமிழ் நாட்டின் மிக பிரபலமான சில நகைச்சுவை நடிகர்களின் ஒரு புகழ்பெற்ற வரிசையைக் கொண்டிருக்கிறது.விவேக் சாருடன், மிக செழுமையான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஷிவாவும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மற்றும் நடுவராக நம்முடன் சேர்கிறார். இந்த நிகழ்ச்சி மிகவும்-தேவையான ஓய்வைக் கொண்டு வரும் மற்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து பொழுது போக்கு அளிக்கும் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.”

ஆதரவற்றோர் இல்லத்தில் ஹன்சிகா பர்த்டே கொண்டாட்டம்: கேக் வெட்டி மகிழ்ந்த குழந்தைகள்!
ஆர் ஜேவிலிருந்து பிரபல நடிகராக மாறியவர் மற்றும் இந்த தொடரின் இணை-தொகுப்பாளருமான மிர்ச்சி சிவா கூறும் போது, “எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம் என்னுடைய இதயத்திற்கு மிக நெருக்கமானது. ஏனென்றால் மகத்தான நடிகர் மற்றும் எனக்கு பிடித்த பொழுதுபோக்காளருமான விவேக் சாருடன் இது என்னுடைய கடைசி படப்பிடிப்பு. அவருடைய பன்முகத்தன்மை மற்றும் வசீகரத்துடன், விவேக் சார் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை ஒரு முழுமையான பொழுதுபோக்கு ஆக்குவதில் கூடுதல் அளவு வேடிக்கையை சேர்த்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு அற்புதமான ஒரு நேரம் கிடைத்தது. தனித்தன்மையான, புத்துணர்வான மற்றும் நகைச்சுவையான பன்சுகளுடன் பேக் செய்யப்பட்ட இந்த எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்) நகைச்சுவை ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களுக்கு வரையறை இல்லாத பொழுது போக்கை உறுதி அளிக்கிறது.அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து , உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த தனித்தன்மையான எழுதப்படாத நிகழ்ச்சியைக் கொண்டுவருவதில் சிலிர்ப்படைகிறேன்”

இந்த பத்து போட்டியாளர்களும் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு இரண்டு நோக்கங்களுடன் போட்டியிடுவார்கள்- வீட்டில் உள்ள மற்றவர்களை சிரிக்கச் செய்வது மற்றும் அவர்களே சிரிக்காமல் இருப்பதை உறுதி செய்வது. இருந்தாலும் ஒரே ஒரு எளிமையான விதி – நீங்கள் சிரித்தால் , நீங்கள் தோற்றுவிடுவீர்கள்! கடைசி வரை நிற்பவரே பட்டத்தை வெல்வார் மற்றும் மிகப் பெரிய ஒரு தொகையான ரூ 25 லட்சத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.

எல் ஒ எல் – எங்க சிரி பாப்போம், ப்ரைம் வீடியோ கேட்லாகில் உள்ள ஆயிரக்கணக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களை சேரும். இவை இந்தியர்கள்-தயாரித்த அமேசான் ஒரிஜினல் தொடர்களான த ஃபேமிலி மேன்-சீசன் 1 மற்றும் புதிய சீசன், எல் ஓ எல்: ஹசே தோ ஃபசே, தான்டவ், மிர்சாபூர் சீசன் 1 மற்றும் 2, காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, ப்ரீத்: இன்டு த ஷேடோஸ், பேண்டிஷ் பேன்டிட்ஸ், பாதால் லோக், த ஃபர்காட்டன் ஆர்மி – ஆசாதி கே லியே, சன்ஸ் ஆஃப் த சாயில்:ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்ஸ்டை எட்ஜ், இந்திய திரைப்படங்களான தூஃபான், ஹலோ சார்லி, கூலி நம்பர்.1, குலாபோ சித்தாபோ, துர்காமாட்டி, சாலாங், சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், ஃப்ரென்ச் பிரியாணி, லா, சூஃபியும் சுஜாதையும், பென் குயின், நிஷப்தம், த்ரிஷ்யம்2, ஜோஜி, மாரா, வி, சியு சூன், சூரரைப் போற்று, பீமா சேன நள மஹாராஜா, ஹலால் லவ் ஸ்டோர், மிடில் க்ளாஸ் மெலடீஸ், புத்தம் புது காலை, அன்பாஸ்ட் , மற்றும் பல மற்றும் விருது -வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜனல்ஸ் ஆன டுமாரோ வார், கமிங் 2 அமேரிக்கா, போரத் சப்ஸ்சீக்வென்ட் மூவிஃபில்ம், டாம் க்லான்சீஸ் ஜேக் ரையான், த பாய்ஸ், ஹன்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் த மார்வலஸ் மிசர்ஸ். மெய்சல் ஆகியவற்றை உள்ளடக்கும். இந்த சேவை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலியில் எழுத்து வடிவ வசனங்களை (சப்டைட்டில்சை) உள்ளடக்குகிறது.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபையர் டிவி, ஃபையர் டிவி ஸ்டிக் ஃபையர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் எங்கேயும் எந்த நேரத்திலும் ப்ரைம் உறுப்பினர்கள் எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம் என்பதைப் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களுடைய மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் எபிசோட்களை டவுன் லோட் செய்யலாம் மற்றும் எங்கேயும் ஆஃப்லைனில் பார்க்கலாம். ப்ரைம் வீடியோ , வருடந்தோறும் ரூ 999 அல்லது மாதந்தோறும் ரூ 129 உடன் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் இந்தியாவில் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/primeல் அதிகம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் ஒரு இலவச 30-நாள் ட்ரையலுக்கு (பயன்படுத்தி பார்ப்பதற்கு) சப்ஸ்க்ரைப் செய்யலாம்.