சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும்’ சூர்யா 41’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது .
ஜிவி பிரகாஷ் இசையில், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில், மாயபாண்டி கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் இரண்டாவது நாயகி குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக மமிதா பைஜூ என்ற மலையாள நடிகை நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான ‘சூப்பர் சரண்யா’ என்ற திரைப்படத்தில் சோனா என்ற கேரக்டரில் மிகவும் அசத்தலாக இவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை இயக்குனர் பாலா தனது திரைக்கதையில் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Glad to have the captivating and gifted @mamitha_baiju on board for #Suriya41!@Suriya_offl #DirBala #Jyotika @gvprakash @rajsekarpandian #Balasubramaniem @IamKrithiShetty @editorsuriya #Mayapandi pic.twitter.com/Ojdid9bpA4
— 2D Leisure (@2D_ENTPVTLTD) March 28, 2022