ஹைலைட்ஸ்:

  • ஜாமீன் கோரும் மீரா மிதுன்
  • பட்டியலின மக்கள் பற்றி தரக்குறைவாக பேசிய வழக்கில் சிறையில் இருக்கும் மீரா

தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலின மக்கள் பற்றி தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடிகை மீரா மிதுன் மீது புகார்கள் குவிந்தது. இதையடுத்து போலீசார் மீரா மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியும் வராமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீரா மிதுனை ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?:இதுல தடை செய்யப்பட்ட போதை…அதன் பிறகு மீரா மிதுனை புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் மீரா மிதுன்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

என்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் மன உளைச்சல் ஏற்பட்டது. அந்த மன உளைச்சலில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசினேன். அப்பொழுது வாய்தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.