ஹைலைட்ஸ்:

  • மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்
  • பட்டியலினத்தவர்களை தரக்குறைவாக பேசிய மீரா மிதுன்

தமிழ் திரையுலகினர் தன்னை காப்பியடிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் மீரா மிதுன். இந்நிலையில் திரையுலகில் இருக்கும் பட்டியலினத்தவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், தன் வேலையை காப்பியடித்து பெயர் வாங்குவதாகவும் மீரா மிதுன் தெரிவித்தார்.

கோலிவுட்டில் இருக்கும் பட்டியலினத்தவர்களை விளாசி அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து பலரும் முகம் சுளித்தனர். இந்நிலையில் பட்டியலினத்தவர்களை மீரா மிதுன் அவதூறாக பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இந்த சூழலில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இது தவிர்த்து மீரா மிதுனை கைது செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள்.

பட்டியலின மக்களை கொச்சைப்படுத்திய மீரா மிதுனை கைது செய்க: போலீசில் புகார்அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நடிகை மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட காணொலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர்களையும், பட்டியல் சாதியினரையும் குற்றவாளிகள், திருடர்கள் எனக் கொச்சைப்படுத்தியுள்ளார். இந்தியா முழுவதும் வசிக்கக்கூடிய கோடிக்கணக்கான பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தும் விதமாகவும், சமூகப் பதற்றத்தை உருவாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்.

நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், சமூக வலைதளங்களில் இதுபோல் சாதிய வன்மப் பேச்சுகள் நிகழாதவாறு தடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.