Memes
oi-Vishnupriya R
சென்னை: சேலை, சுடிதாருலாம் முதல் மாடியில இருக்கு, நாங்கள் ஒரு சட்டை வாங்கறதுக்கு 6-ஆவது மாடிக்கு போகணுமா என மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக பண்டிகையின் போது விதவிதமான அனுபவங்கள் ஒவ்வொருக்கும் கிடைக்கும். அதை காமெடி கண்ணோட்டத்தில் மீம்ஸ்களாக வரும் போது சிரிப்பை வரவழைக்கிறது.

மூட்டை துணியை கணவரிடம் கொடுத்துவிட்டு அவரை ஒரு ஓரமாக உட்கார வைப்பது, தீபாவளிக்கு சுட்ட முறுக்கை தொடர்ந்து சைட் டிஷ்ஷாக வைப்பது என அலப்பறை தாங்க முடியவில்லை. இவைதான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக மாறியுள்ளது. அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்காக:

போனஸ்
தொழிலாளி- போனஸ் வாங்குனதும் தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொல்லாம கொள்ளாம ஊருக்கு ஓடிர வேண்டியதுதான்.
முதலாளி: தீபாவளி வரைக்கும் வேலை வெச்சுட்டு கடைசி நேரத்துல இவனுக்கு போனஸ் தராம இழுத்தடிச்சுர வேண்டியதுதான்!

கறி சோறு
வெள்ளச் சோற ஓரமா வையி #கறிசோறு நடுவுல வையி…
#தீபாவளி அன்று கும்பம் கொட்டலாம் #வாங்க!!
#பெப்பர்ஆட்டுவால்சூப்பு
#பீப்கறிவடை
#இடியாப்பம் #தவாக்கறி
#ராஜ்கிரண் #கறிவிருந்து அதுதான் எங்களுக்கு மருந்து.
#என்உணவு_என்உரிமை

ஆடு வாங்கி
நாங்க ஏன் கடையில கறி வாங்கணும்… ஒரு ஆடு வாங்கி நம்ம அக்கம் பக்கத்தினருடனே பங்குகறி போட்டுக்குவோம்.

போனஸ்+சம்பளம்
டிரஸ், கறி , பட்டாசு, இதர செலவுகள்
போனஸ்+ சம்பளத்துடன் செல்லும் சம்பளகாரர்- என்ன இப்படி காத்திருங்காக போன உடனே நம்மை காலி பண்ணிடுவாங்க போலிருக்கு!

சுடிதார்
அது என்னடா சேலை, சுடிதார்னு பொண்ணுக துணி எல்லாம் முதல் மாடிக்குள்ள வச்சிருக்கிங்க.. நாங்க ஒரு சட்டை எடுக்கணும்னா 6ஆவது மாடிக்கு போக சொல்றீங்க,
மேடம் மேடம்ங்கறயே அவங்க எடுக்கறதுக்கும் பில் நாங்கதான் கட்டணும்.
English abstract
Netisans shared memes on Diwali acquire which have been humourous.
Tale first revealed: Sunday, October 31, 2021, 18:47 [IST]