mumbai indians

ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி  தயாராகிவருகிறது. மும்பையை வெளியேற்ற பஞ்சாப்பும் கங்கனம் கட்டுகிறது.நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் புனே நகரங்களில் களைகட்டி வருகிறது. சொந்த மைதானத்தில் போட்டிகள் நடந்தாலும் மும்பை அணிக்கு தோல்வி முகமே மிஞ்சுகிறது. இன்று நடைபெறும் 23 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இண்டியன்ஸ் அணியும் – மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த போட்டி புனேவில் உள்ள எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை அணி முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அத்துடன் இதுவரை தனக்கு பார்ட்னராக இருந்த சென்னை அணியும் ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுழல்பந்துவீச்சாளரும் லெக் ஸ்பின்னருமான ஃபேபியன் ஆலனை ஆடும் லெவனில் சேர்க்க வாய்ப்புள்ளது. அத்துடன் தொடர்ந்து சொதப்புவதால் பாசில் தம்பிக்கு ஓய்வு வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.

சாதனையை படைக்கும் முனைப்பில் ரோகித் சர்மா

பவர் பிளேயில் இரு அணிகளும் ரன்களை வாரி வழங்குகின்றன. ஆறு ஓவர்களுக்கு 60 ரன்களை விட்டுக்கொடுப்பதில் இரு அணிகளும் கில்லாடிகளாக இருக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்பிளேயில் இழந்த ரன்னை பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறது ஆனால் மும்பை அணி சொதப்புகிறது.

இதையும் படிங்க: பேட்டிங்கில் மிரட்டல்: பந்துவீச்சில் அசத்தல்- முதல் வெற்றியைப் பதிவு செய்த சென்னை அணி

இன்னும் 25 ரன்கள் அடித்தால் டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா, விராட் கோலியை தொடர்ந்து இரண்டாவது இந்தியராகவும், ஒட்டுமொத்தத்தில் ஏழாவது வீரர் என்ற பெருமையை படைக்கவுள்ளார். பேபி ஏபிடி என அழைக்கப்படும் Brevis அசுர ஃபார்மில் உள்ளார். அத்துடன் திலக் வர்மாவும் அசத்துகிறார்.லிவிங்ஸ்டன் அதிரடி

பஞ்சாப் அணியை பொருத்தவரை இரண்டு வெற்றி, தோல்விகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் அசத்தலும், பந்துவீச்சில் சொதப்பலையும் வெளிப்படுத்துகின்றனர். கிறிஸ் கெய்ல் இல்லாத குறையை லிவிங்ஸ்டன் நிரப்பி வருகிறார். தவான்,மயங்,பேர்ஸ்டோ,லிவிங்ஸ்டன், ஜிதிஷ், ஷாரூக் என ஏழு பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஏற்கனவே பௌலிங்கில் சொதப்பும் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்க்க இவர்கள் காத்திருக்கின்றனர். நான்கு போட்டிகளில் மூன்றில் 180 ரன்களை கடந்திருப்பதே பஞ்சாப்பின் பேட்டிங் ஃபார்மை எடுத்துரைக்கிறது.

இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணியிலிருந்து தமிழக வீரர் விலகல்

பவர் பிளேயில் ராகுல் சஹரை பயன்படுத்தி இஷாந்த் கிஷன் விக்கெட்டை வீழ்த்த பஞ்சாப் யூகித்துள்ளது. ரபடா வேகம் இன்று கைகொடுக்கும் என்றே நம்பலாம்.

எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று பனிப்பொழிவு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டாஸ் வெல்லும் அணி முதல் பேட்டிங்கை எடுக்கவே வாய்ப்புள்ளது. இருப்பினும் டாஸ் இன்று முக்கியத்துவம் பெறவில்லை. இரு அணிகளும் இதற்கு முன்பு இருபத்தி ஏழு முறை நேருக்கு நேர் சந்தித்ததில் மும்பைஅணி 14 போட்டிகளிலும் பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.