minister moideen

செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 27-ம் தேதி மாமல்லபுரத்தில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பு மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது. நாடுகளுக்கு இடையே, அணிகளாக மோதும் இப்போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர், செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் முதல்முறை நடத்தப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார். போட்டிக்கான பணிகளை மேற்கொள்ள 4 ஆண்டுகள் ஆகும் சூழலில், நான்கே மாதத்தில் முடிப்பதற்கு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

Additionally learn… டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்

200 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கம் நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 2 ஆயிரத்து 600 அறைகள் முன்பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தொடக்கம் மற்றும் நிறைவு விழா பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.