ஹைலைட்ஸ்:

  • வாகை சந்திரசேகருக்கு 2 பதவிகள் கொடுத்த ஸ்டாலின்
  • ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வாகை சந்திரசேகர்

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பதற்கு பெயர் போனவர் வாகை சந்திரசேகர். திமுக ஆதரவாளரான அவருக்கு இரண்டு பதவிகள் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றை வாகை சந்திரசேகருக்கு அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தனக்கு இரண்டு பொறுப்புகளை வழங்கியிருக்கும் முதல்வருக்கு சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார் வாகை சந்திரசேகர்.
அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், திமுக ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,

வாழ்த்துக்கள் சார். ஆரம்ப காலத்தில் இருந்தே திமுகவில் இருக்கும் நடிகர் நீங்கள் மட்டும் தான். அதனால் உங்களுக்கு இந்த பதவிகள் கிடைத்தது சரியே.

கலைஞர் கருணாநிதி மீது மாறா பற்றும், அன்பும், பாசமும் கொண்டவர் வாகை சந்திரசேகர். அவருக்கு இந்த இரண்டு பதவிகளை அளித்த முதல்வருக்கு நன்றி. தளபதியின் தளபதியாக செயல்பட வாழ்த்துக்கள்.

உங்களின் கழக பற்றுக்கு கிடைத்த பரிசு. நல்ல அனுபவசாலி நீங்கள். அதனால் இந்த இரண்டு பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை என தெரிவித்துள்ளனர்.

கஞ்சா அடித்து சாய் பாபாவின் முகத்தில் புகையை விட்ட மீரா மிதுன்: வைரல் வீடியோ