1649016259 pic

ஐபிஎல் 15ஆவது சீசன் 11ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.பஞ்சாப் இன்னிங்ஸ்:

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், தொடக்க பந்தில் பவுண்டரி அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து முகேஷ் சௌத்ரி வீசிய இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடிக்க முற்பட்ட நிலையில், கவர் திசையில் ராபின் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இதனால், பஞ்சாப் அணிக்கு துவக்கத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது. அந்த ஓவரில் 8 ரன்கள் கசிந்தது.

தோனி ரன் அவுட்:

இந்நிலையில் கிறிஸ் ஜோர்டன் வீசிய இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ராஜபக்ஷா இரண்டு ரன்கள் ஓட முற்பட்ட நிலையில், கிறிஸ் ஜோட்ரனின் த்ரோவை தோனி, பறந்து பிடித்து ராஜபக்ஷாவை ரன் அவுட் ஆக்கினார். 40+ வயசாகியும் தோனி, சுறுசுறுப்பாக செயல்பட்டு ரன் அவுட் செய்ததை, ரக வீரர்கள் வியப்புடன் பார்த்து, தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன், ஷிகர் தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் மழை பொழிய ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில், தவன் 33 (24), ஜடேஜா 60 (32) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். லிவிங்ஸ்டன் பேட்டில் இருந்து 5 சிக்ஸர்கள் வந்திருந்தது. அதில் ஒன்று 108 மீட்டர் சிக்ஸர் ஆகும். அடித்துக் களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா 26 (17), ஷாருக்கான் 6 (11) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 180/8 ரன்களை குவித்தது.

சிஎஸ்கே இன்னிங்ஸ்:

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வைபவ் ஓரா வீசினார். பனியின் தாக்கம் இருந்தும் தீபக் சஹார்போல் பந்துகளை அசால்ட்டாக இன் ஸ்விங், அவுட் ஸ்விங் செய்து அசத்தினார். மற்ற பௌலர்களும் அபாரமாக பந்துவீசியதால், சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணற ஆரம்பித்தது. ருதுராஜ் கெய்க்வாட் (1), ராபின் உத்தப்பா (13), மொயின் அலி (0), அம்பத்தி ராயுடு (13) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.

அடுத்து ரவீந்திர ஜடேஜாவும் (0) ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே 30 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அசத்திடார். அடுத்து நிதானமாக விளையாடி வந்த தோனியும் 23 (28) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், சிஎஸ்கே 17.5 ஓவர்கள் முடிவில் 126/10 ரன்களை மட்டும் சேர்த்து, 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.