சௌத்ரி ரிட்டர்ன்:
முதல் சில போட்டிகளில் சொதப்பிய முகேஷ் சௌத்ரி கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி, பார்முக்கு திரும்பிவிட்டார். இவர் மும்பை காரர் என்பதாலும், நெருக்கடி குறைந்துவிட்டதன் காரணத்தினாலும், இன்று ஆர்சிபிக்கு எதிராக மிரட்டிலாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம் மில்னேவும் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டார். இதனால், பந்துவீச்சில் இன்று சிஎஸ்கே பட்டையைக் களப்பும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
டூ பிளஸிக்கு ஸ்கெட்ச்:
இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே ஓபனரும், ஆர்சிபி கேப்டனுமான டூ பிளஸியை வீழ்த்த சிஎஸ்கே பௌலர்களுக்கு தோனி திட்டம் தீட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டூ பிளஸி சிஎஸ்கேவில் இருந்தபோது தோனி, ருதுராஜுடன்தான் ஒன்றாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனால், டூ பிளஸியின் வீக்னஸ் இந்த இருவருக்கும் தெரியும். இந்நிலையில்தான், டூ பிளஸி விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்க, தோனி பௌலர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
அதேபோல் ஜோஸ் ஹேசில்வுட்டிற்கு சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் நுட்பமான வீக்னஸ் தெரியும் என்பதால், இவருக்கு எதிராக சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சற்று நிதானமாக விளையாட வேண்டும் எனவும் தோனி அறிவுறுத்தியிருக்கிறாராம். இருப்பினும், இன்றைய போட்டியில் ஹேசில்வுட்டிற்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.