1649452514 pic

ஐபிஎல் முதல் சீசன் துவங்கியபோது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா, அடுத்த ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சென்றார். அந்த சீசனில் உத்தப்பா சிறப்பாக விளையாடவில்லை. 15 போட்டிகளில் 175 ரன்களை மட்டுமே சேர்த்தார்.இருப்பினும், ஆர்சிபி இவரை கழற்றிவிடவில்லை. இந்த நம்பிக்கையை காப்பாற்ற 2010ஆம் ஆண்டில் தொடர்ந்து காட்டடி அடித்து 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 300 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து 2011-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு சென்ற உத்தப்பா, அடுத்து கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அங்கு சிறப்பாக சோபிக்கவில்லை. படுமோசமாக சொதப்பியதால், உத்தப்பாவுக்கு இனி வாய்ப்பே கிடைக்காது என்றுதான் கருதப்பட்டது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தப்பாவை வாங்கியது. அந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேடிங் முறையில் உத்தப்பாவை வாங்கியது.

பார்ம் அவுட்டில் இருந்த வீரரை டிரேடிங் முறையில் 2 கோடிக்கு வாங்கியதற்கு, சிஎஸ்கே நிர்வாகம் மிகக் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில், நிர்வாகம் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற தொடர்ந்து அபராமாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஓபனராகவும் களமிறங்கி வருகிறார்.

உத்தப்பா பேட்டி:

இந்நிலையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் பக்கத்திற்கு பேட்டிகொடுத்துள்ள உத்தப்பா, நான் எப்படி சிஎஸ்கேவுக்கு வந்தேன் என்பது குறித்து விரிவாக பேசியுள்ளார். அதில் “கொல்கத்தா அணியில் இருந்தபோது சிறப்பாக சோபிக்கவில்லை. அடுத்து ராஜஸ்தான் அணியிலும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால், எனது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருந்த நேரத்தில் நான், எனது திறமையை நிரூபிக்க சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்று விளையாடி வந்தேன். அப்போது கேரளா, ஆந்திரா அணிகளுக்கு இடையிலான போட்டி, மும்பையில் நடைபெற்றபோது நான் கேரளா அணியிலும், அம்பத்தி ராயுடு ஆந்திரா அணியிலும் இருந்தார். ஆந்திர அணிக்கு ராயுடுதான் கேப்டன்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அப்போது, ராயுடு என்னை நலம் விசாரித்து, ‘இனி என்ன செய்யப் போகிறாய்’? எனக் கேட்டார். பிறகு அவர், ‘நான் வேண்டுமானால் ஒன்று செய்கிறேன். உனக்கு காசி சாரினுடைய (காசி விஸ்வநாதன்) தொடர்பு என்னை தருகிறேன். நீங்கள் அவரை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை போன்ற வீரர் எங்கள் அணியில் தேவை’ என்றார். நானும் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டேன்” என உத்தப்பா தெரிவித்தார்.

மகிழ்ச்சி செய்தி:

தொடர்ந்து பேசிய உத்தப்பா “இதுவரை நான் அப்படி யாரிடமும் கேட்டதில்லை. முதல் முறையாக அப்படி காசி சாருக்கு ஃபோன் செய்து, நான் அப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தெரிவித்து, ‘நான் சென்னை அணிக்காக விளையாடினால் நன்றாக இருக்கும்’ என கூறினேன். பிறகு ராஜஸ்தான் அணியிடமிருந்து இந்த பேச்சுக்கள் தொடங்கிவிட்டன என தெரிந்துகொண்டேன். இந்த பேச்சுக்கள் எங்கு செல்லும் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பின், மும்பையிலிருந்து நான் கிளம்பும் போது,காசி சார் எனக்கு ஃபோன் செய்தார். அப்போது, அவர் என்னிடம், ‘ராபி ஒப்பந்தம் முடிந்தது, நீங்கள் எங்களோடு சேர போகிறீர்கள்.’ என தெரிவித்தார்.

மேலும் அவர் என்னிடம், “எம்.எஸ்.தோனி இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. அணி நிர்வாகமும், ஊழியர்களும், நீங்கள் இந்த அணிக்கு பெரும் மதிப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறார்கள்” என் கூறியதாக பகிர்ந்துகொண்டார்.

இதற்கு பிறகு 2022யில் நடந்த மெகா ஏலத்தில் கூட சென்னை அணி உதப்பாவை 1 கோடி ரூபாய்க்கு வாங்கியதும், தற்போது சென்னை அணிக்கு உத்தப்பா ஓபன்னராக களம் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.