பிரச்சினை ஓவர்:
சிஎஸ்கேவில் இருந்த மிகப்பெரிய பிரச்சினைகள் ருதுராஜ் பார்ம் அவுட், டெத் பௌலிங்கில் சொதப்பல் ஆகியவைதான். இதில் டெத் பௌலிங் பிரச்சினை தற்போது முடிவுக்கு வந்துவிட்டதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். டெத் பௌலிங்கில் முகேஷ் சௌத்ரிதான் சொதப்பி வந்தார். இவர் கடைசியாக நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் ஸ்லோ பால்கள், ஒயிட் யார்க்கர்களை வீசி அசத்தியிருந்தார்.
இந்நிலையில், தற்போது பயிற்சியின்போதும் சிறப்பாக பந்துவீசி வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசியதால்தான், அவருடைய மன உறுதி அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முகேஷ் சௌத்ரி அபாரமாக பந்துவீசி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முகேஷ் சௌத்ரி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த பிட்ச்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். பழக்கப்பட்ட பிட்ச்தான். புதியவர் என்பதால் முதல் சில போட்டிகளில் தடுமாற்றத்துடன் பந்துவீசியிருந்தார். தற்போது மன உறுதி அதிகமாகியிருப்பதால், எவ்வித அழுத்தங்கள் இல்லாமல், இயல்பாக அதிரடியாக பந்துவீச அதிக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
முகேஷ் சௌத்ரி மொத்தம் 15 உள்ளூர் டி20 போட்டிகளில் 18 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். சராசரி 8ஆக உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று போட்டிகள் முடிந்தப் பிறகு தீபக் சஹார் அணியில் இணைந்துவிடுவார் என்பதால், அதுவரை இவரைத்தான் அணி நம்பியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.