1649764391 pic

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்று, புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.சிஎஸ்கே தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்றாலும், இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவுக்கு வரவில்லை. இதற்குமுன் 2010ஆம் ஆண்டிலும் இதேபோல் சிஎஸ்கே தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்று, இறுதியில் கோப்பை வென்று அசத்தியிருக்கிறது. இதேபோல், 15ஆவது சீசனிலும் சிஎஸ்கே வரலாறு படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புல் பார்ம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது ஓபனர் ருதுராஜ் பார்ம் அவுட், பௌலர்கள் சொதப்பல்தான். இந்நிலையில் இந்த இரு பிரச்சினைகளையும் சரிசெய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் கடந்த நான்கு போட்டிகளிலும் சொதப்பிய நிலையில், அவுட் ஆன விதத்தை தொடர்ந்து வீடியோவில் பார்த்து, தான் எந்த இடத்தில் தவறு செய்திருக்கிறோம் என்பது குறித்து ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் பயிற்சி மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் முகேஷ் சௌத்ரி கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி, பார்முக்கு திரும்பிவிட்டார். இவர் மும்பை காரர் என்பதாலும், நெருக்கடி குறைந்துவிட்டதன் காரணத்தினாலும், இன்று ஆர்சிபிக்கு எதிராக மிரட்டிலாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடம் மில்னேவும் காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டார்.

இதனால், பந்துவீச்சில் இன்று சிஎஸ்கே பட்டையைக் களப்பும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பௌலர்களுக்கு டார்கெட்:

இந்நிலையில் மகேந்தரிசிங் தோனி, பௌலர்களுக்கு டார்கெட் ஒன்றை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளின் பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே பௌலர்கள் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம்தான். இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஆர்சிபிக்கு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பௌலர்கள் குறைந்தது மூன்று விக்கெட்களையாவது வீழ்த்திக் கொடுக்க வேண்டும் என தோனி டார்கெட் கொடுத்துள்ளாராம்.

அதற்கேற்ப சிஎஸ்கே பௌலர்களும் தொடர்ந்து திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்களாம். குறிப்பாக, முன்னாள் சிஎஸ்கே வீரர், இன்னாள் ஆர்சிபி கேப்டன் டூ பிளஸியின் வீக்னஸ் தோனிக்கு தெரியும் என்பதால், அவரை வீழ்த்த பௌலர்களுக்கு தோனி ஐடியா கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.