பஞ்சாப் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ் பௌலர் டேனியல் சாம்ஸ்தான். 18ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் உட்பட 24 ரன்களை விட்டுக்கொடுத்தார். மொத்தம் 4 ஓவர்களில் 57 ரன்களை கசியவிட்டிருந்தார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களை கசியவிட்ட பௌலர்கள் லிஸ்டில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 5 இடங்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
5.ஜஸ்பிரித் பும்ரா
2021ஆம் ஆண்டு நடந்த சிஎஸ்கே அணியுடனான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 56 ரன்களை விட்டு கொடுத்தார். இந்த போட்டியில் அதிகபட்சமாக அம்பதி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார்.
4.அபு நெச்சிம்:
2011ஆம் ஆண்டு நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியில் அபு நெச்சிம் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து 56 ரன்களை விட்டு கொடுத்தார். இந்த போட்டியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார்.
3.ஹர்திக் பாண்டியா:
2019 ஆம் ஆண்டு நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 57 ரன்களை விட்டு கொடுத்தார். இந்த போட்டியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார்.
2.டேனியல் சாம்ஸ்
2022 ஆம் ஆண்டு நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியில் டேனியல் சாம்ஸ் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 57 ரன்களை விட்டு கொடுத்தார். இந்த போட்டியில் அதிகபட்சமாக லலித் யாதவ் 38 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார்.
1.லசித் மாலிங்கா
2017 ஆம் ஆண்டு நடந்த கிங்ஸ் லெவன்அணியுடனான போட்டியில் லசித் மாலிங்கா 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 58 ரன்களை விட்டு கொடுத்தார். இந்த போட்டியில் அதிகபட்சமாக ஹாஷிம் ஆம்லா 60 பந்துகளில் 104 ரன்களை எடுத்தார்.