1649229015 pic

15 ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளனர்.ஷ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மியில் இருக்கின்றனர். அதேநேரத்தில், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, சுனில் நரைன், வருன் சக்கரவர்த்தி போன்ற பவுலர்களும், சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்தி வருகின்றனர்.

மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. மும்பை அணியில் இஷான் கிஷன், கீரன் போலார்ட், திலக் வர்மா போன்றவர்கள் பேட்டிங்கில் நன்றாக விளையாடினாலும் அவர்களால் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. பும்ரா, டைமல் மில்ஸ் தங்கள் பங்களிப்பை கொடுத்தாலும் இன்னுமும் அவர்கள் முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை.

புள்ளி விவரங்கள் :

இவ்விரு அணிகளுக்கும் இதுவரை, 29 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 22 முறை மும்பை இந்தியன்ஸ்யும், 7 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த விக்கெட்டில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 161.

60% போட்டிகள் இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றுள்ளன

சூரிய குமார் யாதவ் இந்த போட்டியில் அணிக்கு திரும்பினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பலமாக இருக்கும்.

உத்தேச லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (வி.கீ), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன் (வி.கீ), அன்மோல்பிரீத் சிங், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.