ஹைலைட்ஸ்:

  • கைவிடப்பட்ட காத்து வாக்குல ரெண்டு காதல்?
  • விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வந்த காத்து வாக்குல ரெண்டு காதல்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா, சமந்தா என்று இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள்.

படப்பிடிப்பை ஹைதராபாத்திலும், சென்னையிலும் நடத்தினார் விக்னேஷ் சிவன். 15 நாட்கள் தான் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது என்றார்கள். மேலும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் தீவிரமானதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் மறுபடியும் துவங்கவில்லை. இந்நிலையில் சமந்தா தெலுங்கு படங்களில் பிசியாகிவிட்டார். விஜய் சேதுபதியோ படங்கள், வெப் தொடர், டிவி நிகழ்ச்சி என்று பரபரத்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாரா தன் முதல் பாலிவுட் படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார். இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை கைவிட விக்னேஷ் சிவன் முடிவு செய்திருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

வெறும் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கும் நிலையில் படத்தை கைவிடாதீங்க விக்னேஷ் சிவன் என்கிறார்கள் ரசிகர்கள். விக்னேஷ் சிவன் பற்றி அடிக்கடி வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த தகவலும் வெறும் வதந்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

எதிர்பார்க்கல, திடீர்னு நடந்துடுச்சு: இரண்டு ‘குட் நியூஸ்’ சொன்ன நயன்தாரா, விக்னேஷ் சிவன்