ஹைலைட்ஸ்:

  • காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்
  • படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை வந்த சமந்தா

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினார். அதன் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.

இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கும் நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கைவிடப்பட்டதாக பேச்சு கிளம்பியது. ஆனால் அதில் உண்மை இல்லை.

Nayanthara: இவ்ளோ நாள் இருந்துட்டு இப்போ போய் கைவிட்டுட்டீங்களா விக்னேஷ் சிவன்?
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பிய சமந்தா விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

படத்தை இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ரிலீஸ் செய்ய விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளாராம். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நானும் ரௌடி தான் வெற்றிக் கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இதற்கிடையே விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா கண் பார்வையில்லாதவராக நடித்த நெற்றிக்கண் படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.