ஹைலைட்ஸ்:

  • ஷாருக்கானை இயக்கும் அட்லி
  • அட்லி படத்தில் நடிக்க ஓகே சொல்லாத நயன்தாரா
  • பாலிவுட் போக நயனுக்கு அவசரம் இல்லையாம்

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கோலிவுட்டில் வளர்ந்த உடன், பாலிவுட் பக்கம் செல்ல நடிகைகள் விரும்புவார்கள். ஆனால் நயன்தாரா அப்படி இல்லை. தன்னை தேடி வந்த பாலிவுட் பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில் தான் நயன்தாராவுக்கு நெருக்கமான இயக்குநர் அட்லி, ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் பண்ணுகிறார். நான் பாலிவுட் போகும் போது என்னோடு சேர்ந்து நீங்களும் வர வேண்டும் என்று நயன்தாராவிடம் கேட்டாராம். அதாவது ஷாருக்கான் ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார் அட்லி.

இந்நிலையில் நயன்தாராவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

பாலிவுட் படத்தில் நடிக்க நயன்தாரா அவசரப்படவில்லை. அவர் நிச்சயம் பாலிவுட்டில் படம் பண்ணுவார். ஆனால் அவரின் கதபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். அட்லி படத்தில் நடிக்க நயன்தாரா ஓகே சொல்லவில்லை.

அட்லி இன்னும் ஸ்க்ரிப்ட் எழுதி முடிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் ஸ்க்ரிப்ட் வேலையை முடித்த பிறகே நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பது தெரிய வரும். அதுவரை, நயன்தாரா பாலிவுட் படத்தில் நடிப்பது என்பது செய்தி அல்ல வெறும் வதந்தி தான் என்றார்.

நயன்தாரா தற்போது அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பாட்டு மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஹீரோ ஃபஹத் ஃபாசில். இது தவிர்த்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம், காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா தொடர்பான காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க வேண்டியிருக்கிறதாம். இந்நிலையில் அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4ம் தேதி நிச்சயம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பொறுத்தவரை இன்னும் 15 நாட்கள் தான் ஷூட்டிங் போக வேண்டியதாம். மேலும் இந்த மாதம் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். முன்னதாக இதுவும் கடந்து போகும் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

நயன்தாராவுடன் திருமணம் எப்பொழுது?: விக்னேஷ் சிவன் செம விளக்கம்