டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா சொன்ன ஒரு விஷயம் பலரையும் கவர்ந்துவிட்டது.

நயன்தாரா

நயன்தாரா டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் அரிது. இந்நிலையில் தான் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார். வராத ஆள் வந்தால் டிடி சும்மாவிடுவாரா?. நயன்தாராவிடம் காதலர் விக்னேஷ் சிவன் பற்றி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டார். மேலும் கையில் இருக்கும் மோதிரம் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

நிச்சயதார்த்தம்

தனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொச்சியில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக கூறினார் நயன்தாரா. அந்த நிகழ்ச்சியில் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் திருமணம் பிரமாண்டமாக நடக்கும். அது நடக்கும் போது நான் நிச்சயம் அறிவிப்பேன் என்று நயன்தாரா தெரிவித்தார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனை ஏகத்திற்கும் புகழ்ந்து பேசினார் நயன்தாரா. அவர் கூறியதாவது, கடந்த ஆறு ஆண்டுகளாக அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தன் அம்மா, சகோதரிக்கு போன் செய்து அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று கேட்ட பிறகே சாப்பிடுவார். ரத்த சொந்தங்களை இந்த அளவுக்கு பார்த்துக் கொள்ளும் நபர் நிச்சயம் தன் வாழ்க்கைத் துணையையும் பத்திரமாக பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது என்றார்.

மகிழ்ச்சி

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். கடைசி வரை இப்படியே இருந்துவிடுவார்களோ என்பது தான் ரசிகர்களின் கவலையே. இந்நிலையில் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று நயன்தாரா கூறியிருப்பது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் நயன்தாராவின் திருமணம் நடக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.