பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தை பற்றி கூறி கண் கலங்கியிருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் நயன்தாரா கலந்து கொண்ட நெற்றிக்கண் ஸ்பெஷல் டிவி நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பானது. படத்தை விளம்பரம் செய்யாத ஆளான நயன்தாரா வந்ததை பார்த்த டிடியோ, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் கேட்க நினைத்த அனைத்து கேள்விகளையும் கேட்டார்.

தந்தை

நயன்தாரா எங்குமே தன் தந்தை குரியன் பற்றி பேசியது இல்லை. இந்நிலையில் டிடி நிகழ்ச்சியில் அப்பாவை பற்றி பேசிய அவர் அழுதுவிட்டார். என் அப்பா விமானப்படையில் பணியாற்றியவர். அவர் பற்றி நான் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பேசியது இல்லை. நான் நடிக்க வந்த 2, 3 ஆண்டுகளிலேயே அப்பாவின் உடல்நலம் மோசமாகிவிட்டது. கடந்த 13 ஆண்டுகளாக அவரின் உடல்நலம் சரியில்லை என்றார் நயன்தாரா.

அப்பா

ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போன்று அப்பாவை பார்த்துக் கொள்கிறோம். அவரை நான் ஒரு ஹீரோவாக பார்க்கிறேன். மற்றவர்கள் அவரை பற்றி நல்ல விஷயங்களை சொல்லித் தான் கேட்டிருக்கிறேன். தற்போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார். என்னால் ஒரு விஷயத்தை மாற்ற முடியுமென்றால் என் அப்பாவை நான் சிறு வயதில் பார்த்தது போன்று மாற்றுவேன் என்று கூறினார் நயன்தாரா.

நிச்சயதார்த்தம்

நயன்தாராவை மணக்கோலத்தில் பார்க்க விரும்புகிறார் குரியன். இதையடுத்து தான் கொச்சியில் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டதாக நயன்தாரா கூறினார். மேலும் தனக்கு நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார் நயன்தாரா.