தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியும், யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கே.ஜி.எப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு திரைப்படங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் – இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இந்த இரண்டு படங்களில் எந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற போட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ படத்தின் டிரைலர் அந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில் அந்த டிரைலருக்கு இயக்குனர் நெல்சன் வாழ்த்து தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் .
நெல்சனின் வாழ்த்துக்கு நன்றி கூறிய இயக்குனர் பிரசாந்த் நீல், விஜய் நடித்த திரைப்படம் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை திரையில் காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று பதில் வாழ்த்து தெரிவித்தார்.
‘பீஸ்ட்’ மற்றும் கே.ஜி.எப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் போட்டியாக இருந்தாலும் இரண்டு படங்களின் இயக்குனர்களும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
Thanks @Nelsondilpkumar, can't wait to peer @actorvijay sir at the large display like I all the time do.
The entire very best for #Beast?? https://t.co/zYFKafjB2x— Prashanth Neel (@prashanth_neel) March 28, 2022